ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் போலியான நகைகளை வைத்து மோசடி நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து தூத்துக்குடியிலிருந்து வங்கியின் உயர் அலுவலர்கள் குழு நேற்று வந்து வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையும்... எலிமருந்தும்...!
ஆய்வின்போது, வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளில் சில போலி நகைகளாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றிவந்த முதுகுளத்தூரைச் சேர்ந்த சண்முகப்பாண்டி என்பவரிடம் ஐ.ஓ.பி. அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திடீரென அவர், தான் வைத்திருந்த எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை கடலாடி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சையளித்து மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரோ 35...! மோசடியோ 50...!