தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு

ராமநாதபுரம்: ஜல் ஜீவன் திட்டத்தில் 1500 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

By

Published : Feb 2, 2021, 9:51 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு வாணி வீதி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் 1500 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுடர் என்பவர் கூறியதாவது, "எங்கள் பகுதியில் நிலக்கடலை, காய்கறி உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் விவசாயம் செய்துவருகிறோம். குடியிருப்பு அருகிலேயே விவசாய தோட்டங்களும் அமைந்துள்ளன.

இங்கு ஏற்கனவே பெரும்பாலான வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. இந்நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தில் 1,500 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து வீடுகள்தோறும் குடிநீர் வழங்க ஊரக வளர்ச்சித் துறை முயற்சிக்கிறது.

1,500 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். இதன்மூலம் விவசாய கிணறுகள் வறண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே ஆழ்துளைக் கிணறு அமைக்காமல், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாழடைந்த ரேஷன் கடை: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details