ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு வந்த புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், நேற்று மாலை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை, இரவு 7.30 மணி வரையும் தொடர்ந்தது நடந்தது.
நகராட்சி அலுவலகத்தில் சிக்கிய ரூ.70,000 கணக்கில் வராத பணம்! - ரூ.70,000 கணக்கில் வராத பணம்
ராமநாதபுரம்: கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 70,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

கீழக்கரை நகராட்சி அலுவலகம் சோதனை
நகராட்சி ஆணையர் தனலட்சுமி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், பணியாளர் ஆகியோரை வெளியே செல்ல விடாமல் விசாரணை செய்தனர். மேலும், அலுவலக கோப்புகள், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், பதிவேடுகள், வரவு செலவு, கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்தனர்.
கீழக்கரை நகராட்சி அலுவலகம் சோதனை
அப்போது அலுவலர்களிடம் இருந்து ரூ.1.05 லட்சத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். இதில் அலுவலக பணம் போக கணக்கில் காட்டப்படாத ரூ.70ஆயிரத்தை கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.