தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.பி.எஸும் - ஈ.பி.எஸும் அதிமுகவின் இரண்டு கண்கள் - manikandan

ராமநாதபுரம்: ஓ.பி.எஸும் - ஈ.பி.எஸும் அதிமுகவின் இரண்டு கண்கள் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மணிகண்டன்

By

Published : Jun 9, 2019, 6:33 PM IST

ராமநாதபுரம் மாவட்டம்,ராமேஸ்வரத்தில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் ரூ. 2கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணியை தொடங்கி வைக்க அமைச்சர் மணிகண்டன் ராமேஸ்வரம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சாலை அமைக்கும் இந்தத் திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை தவிர்த்து கூடுதலாக ரூ.5 கோடி செலவில் சாலைப்பணிகள், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்டவைகளும் தொடங்கப்படவுள்ளது என்றார்.

ஓ.பி.எஸும் - இ.பி.எஸும் அதிமுகவின் இரண்டு கண்கள்

இதைத்தொடர்ந்து அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் ஓபிஎஸூம், ஈபிஎஸூம் அதிமுகவின் இருகண்கள் ஆவார்கள். அவர்களை பிரித்துப் பார்க்க விரும்பவில்லை என்றார்.

ABOUT THE AUTHOR

...view details