உலகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாகப் பணியாற்றி வரும் 10 வனச்சரக அலுவலர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதை சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் வழங்குகிறது. இதற்காக 100 நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட வனச்சரகர்கள் விண்ணப்பித்தனர்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா பகுதியில் கடல் அட்டை கடத்தலுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதிவு செய்ததற்காகவும், அலையாத்தி காடுகளில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காகவும் வனச்சரகர் சதீஷ் என்பவரது பெயரை இவ்விருதுக்காக மூத்த அறிவியல் அறிஞரான சிவக்குமார் முன்மொழிந்தார்.