தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்துக் கோயிலை பராமரித்த இஸ்லாமிய வணிகக் குழு" - தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறும் அரிய தகவல் - ராமநாதபுரம் மாவட்ட செய்தி

அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமிய வணிகக் குழுவினர் தீர்த்தாண்டதானம் கோயில் மண்டபத்தை பராமரித்த கல்வெட்டு செய்தியை தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் மூலமாக பாதுகாக்க வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறினார்

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 4:04 PM IST

ராமநாதபுரம்:தொண்டி அருகிலுள்ள கொடிப்பங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது. பள்ளித் தலைமையாசிரியை து.முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் கா.முத்துராமன் முன்னிலை வகித்தார். எட்டாம் வகுப்பு மாணவன் செ.செங்கதிர் செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு பேசுகையில், "தமிழ்நாட்டின் கால்பகுதி கடற்கரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதால் இயற்கை துறைமுகங்களும் உப்பங்கழிகளும் நிறைந்த இங்கு, ரோமானியர், யூதர், சீனர் உள்ளிட்ட வெளிநாட்டு வணிகர்கள் வணிகம் செய்துள்ளனர்.

அஞ்சு வண்ணம் என்னும் இஸ்லாமியர் தலைமையிலான வணிகக் குழுவினர் தீர்த்தாண்டதானம் கோயில் மண்டபத்தைப் பராமரித்த கல்வெட்டு செய்தி உள்ளது. ஆனால் இன்று அம்மண்டபமும் கல்வெட்டும் அழிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி முழு வீச்சில் செயல்படுத்தப் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொல்லியலை பள்ளி மாணவர்கள் இதனை கற்றுக் கொண்டு, உள்ளூரில் உள்ள தொல்லியல் தடயங்களை அடையாளம் கண்டு பாதுகாக்க வேண்டும் என மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுருவுக்கு ஏழாம் வகுப்பு மாணவி ம.அபிநயா ஸ்ரீ நன்றி கூறினார்.

பின்னர் நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளுடன் உலகப் பாரம்பரியச் சின்னங்கள், குடைவரைக் கோயில்கள், கற்றளிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. மாணவ மாணவிகள் அவற்றை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.

இதையும் படிங்க: செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவையை நீட்டித்த தெற்கு ரயில்வே!

ABOUT THE AUTHOR

...view details