ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பழைய கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (மே 1) கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரம், மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கான மண்டல குழு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
’’மண்டபம் பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது’’ - மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை! பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ராமநாதபுரத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், அரசு விதிக்கும் விதிமுறைகளை மீறுவோருக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். வழக்குப்பதிவு செய்யப்படும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த சூழலில் மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருந்து நோய் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது 13 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் நகராட்சி ஒன்றியப் பகுதிகளிலும், மண்டபம் ஒன்றியப் பகுதிகளும் நோய்த் தொற்று பரவ அதிக அளவில் இருப்பதாகவும் மக்களின் ஒத்துழைப்பு நோய் பரவலை கட்டுப்படுத்த உதவும்’’ என்று கூறினார்.
இதையுன்ம் படிங்க: மு.க. ஸ்டாலின் ‘மே தின’ வாழ்த்து!