இலங்கை, கச்சத் தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்றது. இதற்கு, நேற்று சுமார் 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் பக்தர்கள் வந்தனர். இவர்கள் கச்சத்தீவு மேற்கு கரையில் படகுகளை நிறுத்திவிட்டு திருவிழாவில் கலந்துகொண்டாதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை கடலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 படகுகள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக, இந்திய கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த, இந்திய கடலோர காவல் படையினர் காற்று வீசும் திசை நோக்கி படகுகளை தேடினர். இதையடுத்து, இந்திய எல்லைக்குள் மிதந்த ஏழு பைபர் படகுகளும் மீட்கப்பட்டன. பின்னர், சர்வதேச எல்லையில், இந்திய கடற்படையினர் மீட்ட படகுகளை, இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, காணாமல் போன படகுகள் இந்திய எல்லைக்குள் வந்திருந்தால் மீட்டு தருமாறு, விழாவைக் காண வந்த நெடுந்தீவு படகு உரிமையாளர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். தற்போது, சொந்த ஊர் திரும்ப முடியாமல் கச்சதீவில் தங்கியுள்ள பக்தர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:மருத்துவர் வேஷம் போட்ட பெண்: தக்க நடவடிக்கை எடுத்த போலீஸ்!