ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி - அரிச்சல்முனை பகுதியில், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அஜந்தா பகதூர் சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலை அவர் பார்வையிட்டார்.
பின்னர் இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து, ஹெலிகாப்டரில் சென்று, கிழக்கு பிராந்திய தளபதி அஜந்தா பகதூர் சிங் ஆய்வு மேற்கொண்டார். இலங்கை, சீனா இடையே நட்புறவு வலுத்து வரும் நிலையில், பாதுகாப்பு அதிகரிப்பது குறித்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.