ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியிலிருந்து ஆறு கடல் தொலைவிலுள்ள ஐந்தாம் மணல்திட்டு பகுதியில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தது.
அப்போது, எல்லை தாண்டி ஒரு பிளாஸ்டிக் பைபர் படகு வந்ததைப் பார்த்தனர். உடனே அந்தப் படகை பின் தொடர்ந்து சென்று பிடித்தனர். படகில் இலங்கையச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள், இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குரூஸ் ரவீந்திரன், வெளிச்சோர் ரேகன் பாய்வா என்பது தெரியவந்து. பின் அவர்களை கைது செய்து அரிச்சல்முனை அழைத்து வந்து, ராமேஸ்வரம் கடற்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.