ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே வடவயலைச் சேர்ந்த கருப்பையா என்பவர் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிச்சங்குறிச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து, கருப்பையா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், 17 வயதே ஆன சிறுவனை வாகனம் ஓட்ட, அனுமதித்தது சிறுவனின் பெரியப்பாவான தனபாலன் என்பதும், வழக்கில் சம்மந்தப்பட்ட இருசக்கரவாகனம் தனபாலன் பெயரில் இருப்பதும் தெரியவந்தது.