ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுபாட்டின் கீழ் வரும் பகுதியில் தற்போது வெளிநாட்டு பறவைகள், மான்கள், மயில், காட்டு முயல் உள்ளிட்ட பாதுகாக்கப்பட வேண்டியவை வாழ்ந்து வருகின்றன.
அம்மாவட்டத்தில் விலங்குகள், பறவைகள், வேட்டையாடுவதைத் தடுக்க தொடர் ரோந்துப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் வனசரக அலுவலர் சதீஷ் தலைமையில், வனவர் மதிவாணன், வனகாப்பாளர்கள் சடையாண்டி, குணசேகர் இவர்களுடன் வேட்டைத் தடுப்பு காவலர்களும் இன்று அதிகாலை அச்சுந்தன் வயல் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
மீட்கப்பட்ட காட்டு முயல்கள் அப்போது சந்தேகப்படும் படியாக சாக்குபையுடன் இருசக்கர வாகனததில் வந்த நபரை சோதனை செய்ய முற்பட்டபோது அவர் தப்பிக்க நினைத்து ஓடியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்த வனத்துறையினர் ராமநாதபுரம் மீன் சந்தை அருகில் அவரை மடக்கிப் பிடித்தனர். பின் அவரிடம் நடத்திய சோதனையில், சாக்கு பையில் உயிருடன் ஒன்பது காட்டு முயல்களும், அத்துடன் வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பேட்டரியும், லைட்டும் இருந்தது கண்டறிப்பட்டு அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முயல்களை கடத்திய நபர் ராமநாதபுரம் பேராவூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த புலேந்திரின் மகன் உதயகுமார் என்பது தெரியவந்தது. அவருக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. காட்டு முயல்கள் உயிருடன் இருந்ததால் பாதுகாப்பான காட்டுப்பகுதியில் அந்த முயல்கள் வனத்துறையினரால் விடப்பட்டது.
9 காட்டு முயல்கள் உயிருடன் மீட்பு; ஒருவர் கைது! இதையும் படிங்க: சென்னையில் நடந்த கடத்தல் சம்பவம்... போலீசார் விசாரணை