தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் பதுக்கிவைத்திருந்த 432 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் ! - ராமநாதபுரம் குற்றச் செய்திகள்

ராமநாதபுரம்: பட்டணம்காத்தான் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 432 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

in-ramanathapuram-432-liquor-bottles-seized-and-one-arrested
கைது செய்யப்பட்டவர்

By

Published : Dec 30, 2019, 3:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.

சட்ட விரோத மதுபான விற்பனையைக் கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். அதன்படி ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக தனிப்பிரிவு தலைமை காவலர் முரளி கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கேணிக்கரை ஆய்வாளர் பிரபுவுக்கு, முரளி கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் உதயக்குமார், தனிப்பிரிவு காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பட்டணம்காத்தான் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் கூடுதல் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 432 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு. இது தொடர்பாக பட்டணம்காத்தான் கிழக்கு தெருவைச் சேர்ந்த சரவணன் கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்க: 1000 லிட்டர் எரிசாராயம் கொட்டி அழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details