ராமநாதபுரம் மாவட்டத்தில் புெரவி புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் 33.50 மிமீ, மண்டபத்தில் 58.00 மிமீ, ஆர்.எஸ். மங்கலத்தில் 26.50 மிமீ என மழை அளவு பதிவாகியுள்ளது.
புரெவி புயல் தாக்கம்: ராமேஸ்வரத்தில் 120.20 மிமீ மழைப்பதிவு! - Impact of Burivi storm
ராமநாதபுரம்: புரெவி புயலால் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 746.30 மில்லி மீட்டர் ஆகும். அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 120.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
rain
இதில், அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 120.20 மில்லி மீட்டரும், வட்டாணத்தில் 40.00 மில்லி மீட்டரும், திருவாடனையில் 34.50 மில்லி மீட்டரும், பாம்பனில் 62.30 மில்லி மீட்டரும், முதுகுளத்தூரில் 105.00 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 85.40 மில்லி மீட்டரும் என மொத்த மழை அளவு 746.30 மில்லி மீட்டர் ஆகும். சராசரியாக 46.64 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: திரிகோணமலை வடக்கே கரையைக் கடந்தது புரெவி புயல்!