தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதலமைச்சர் பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 2) பரப்பரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, ராமநாதபுரம் தனியார் மகாலில் மகளிர் குழுவுடனான சந்திப்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, ராமநாதபுரம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
'அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சரை வாழ்த்தியிருப்பார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
ராமநாதபுரம்: அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சர் பழனிசாமியை வாழ்த்தி இருப்பார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் பழனிசாமி செய்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய சட்டக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை பார்த்த அன்னை தெரசா, வாழ்த்து தெரிவித்தார். தற்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருப்பார்" என்றார்.
Last Updated : Jan 2, 2021, 5:10 PM IST