ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்குட்பட்ட பள்ளிகளில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பு காசு கொடுத்து வந்ததாக தெரியவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகாலம் நிழலாக இருந்தவர் சசிகலா.
அதிமுகவினர் சசிகலாவை ஜெயலலிதாவின் மறு உருவமாகவே பார்க்கின்றனர். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நந்தனத்தில் தேவர் சிலை திறக்க உத்தரவாதம் தரும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்பேன். திருவாடானை தொகுதியில் இனி நான் போட்டியிட மாட்டேன். அதற்காக இந்தத் தொகுதி மக்களை குறைகூறவில்லை. அனைத்து சமுதாய மக்களும் எனக்கு வாக்களித்துள்ளனர்.