ராமநாதபுரம் மாவட்டம், அரண்மனை பகுதியில் எம்ஜிஆரின் 104aaவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. அது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்.
ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்: அன்வர் ராஜா! - முன்னாள் எம்.பி அன்வர் ராஜா
ராமநாதபுரம்: நீட் தேர்வை மு.க.ஸ்டாலின் ரத்து செய்துவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
![ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்: அன்வர் ராஜா! ADMK EX.MP Anwar Raja EX.MP Anwar Raja EX.MP Anwar Raja talks about neet exam அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முன்னாள் எம்.பி அன்வர் ராஜா நீட் தேர்வு குறித்து பேச்சு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10373963-thumbnail-3x2-rmd.jpg)
EX.MP Anwar Raja talks about neet exam
நீட் தேர்வை மு.க.ஸ்டாலின் ரத்து செய்துவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். இதுபோன்ற பொய் பரப்புரையை மு.க. ஸ்டாலின் செய்ய வேண்டாம். இதை கருத்தில்கொண்டுத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க:சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் பிளவுக்கு வாய்ப்புண்டா? அன்வர் ராஜா விளக்கம்