ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வங்காருபுரத்தைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த நவம்பர் 17 அன்று வயல்வெளியில் உள்ள தனது குடிசை அருகே தனது மனைவி மாரியம்மாள் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானர். இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தனிக்கொடியை தேடி வந்தனர். தேடப்படும் குற்றவாளியாக தனிக்கொடியை அபிராமம் காவல்துறையினர் அறிவித்தனர்.
மனைவியை கொலை செய்த கணவர் அதே இடத்தில் தற்கொலை! - கமுதி தற்கொலை செய்திகள்
ராமநாதபுரம்: நான்கு மாதங்களுக்கு முன்பு மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தலைமறைவான கணவன் அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
Husband
இந்நிலையில், நேற்று (பிப்.4) மனைவியை கொலை செய்த அதே இடத்தில் தனிக்கொடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தனிக்கொடியின் தந்தை சந்திரன் அபிராமம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிக்கொடி உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.