தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயில் கணவர் மரணம்: உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை - wife request collector

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்கக்கோரிக்கை மனு கொடுத்தார்.

துபாயில் கணவர் மரணம்
துபாயில் கணவர் மரணம்

By

Published : Aug 2, 2021, 10:27 PM IST

ராமநாதபுரம்:புளியங்குடியைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர் கடந்த எட்டு வருடங்களாக துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் கூழித்தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் ஜூலை 26ஆம் தேதி குமாரவேல் இறந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. அவர் வேலை செய்த நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு கேட்டதில் சரியான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

கணவரின் உடலை மீட்டுத் தர மனைவி கோரிக்கை

கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உடலை மீட்டுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று குமாரவேலின் மனைவி சண்முகவள்ளி கண்ணீர் மல்க மனு அளித்தார்.

இதையும் படிங்க: திரைப்பட விமர்சகர் ராஷித் இரானி காலமானார்

ABOUT THE AUTHOR

...view details