ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வழிபாடு நிகழ்வுகளில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பல்வேறு கட்ட தளர்வுக்கு பின் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் திருக்கோயிலில் உள்ள புனித தீர்த்தம் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, திருக்கோயில் 22 தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சியினர் சார்பில் கிழக்கு கோபுர வாசலின் முன்பு பக்தர்களுக்கு தீர்த்தம் தெளித்தும், அவர்களுக்கு தீர்த்தம் வழங்கியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.