ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த காந்தி என்பவருக்குப் புதியதாக நாட்டுப் படகு வாங்குவதற்காக கடந்த 29ஆம் தேதி, பத்து மீனவர்கள் கடலூர் சென்றனர். நாட்டுப் படகை வாங்கிக் கொண்டு கடல் வழியாக செப். 3ஆம் தேதி கடலூரில் இருந்து ராமேஸ்வரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தப்போது சூறைக் காற்றில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்தது.
உயிரிழந்த மீனவர்களுக்கு இந்து மக்கள் கட்சியினர் அஞ்சலி!
ராமேஸ்வரம்: மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து உயிரிழந்த நான்கு மீனவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதில் பத்து மீனவர்கள் கடலில் விழுந்துள்ளனர், அதில் செந்தில்வேல், காளிதாஸ், முனியசாமி, தரக்குடியான், முனீஸ்வரன், ரஞ்சித் குமார் ஆகிய ஆறு பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். மதன், காந்தகுமார், உமா காந்த், இலங்கேஸ்வரன் ஆகியோர் சம்பவம் இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த அந்த நான்கு மீனவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மேலும் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.