கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் செயல்பட்டு வந்த அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மது போதைக்கு அடிமையான சிலர், போதைக்காக பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு தரப்பினர் மயக்க நிலையை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளான டைடால், டையஷிம்பாம், மான்ட்ராக்ஸ் உள்ளிட்டவற்றை போதைக்காகப் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, கேணிக்கரை காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. புகார்கள் குறித்து பேசிய அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், “ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்து கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்படும் மருந்து சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மருந்து, மாத்திரைகள் இனி விநியோகம் செய்ய வேண்டும்.