தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வாணை நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது- இந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு!

ராமநாதபுரம்: குரூப்-1 தேர்வில் பெரியார் திரைப்படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டு இருப்பது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Jan 8, 2021, 10:10 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற 25ஆம் தேதி ராம கோபாலனுக்கு திருச்சியில் மணிமண்டப பூமி பூஜை நடைபெற உள்ளது. அதற்கு மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கியஸ்தர்கள் வர உள்ளனர்.

நடந்து முடிந்த குரூப்-1 தேர்வில் பெரியாரைப் பற்றியும், பரியேறும் பெருமாள் போன்ற சாதித் திரைப்படத்தை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது, அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இப்படியே சென்றால் வரும் ஆண்டுகளில் ஜோதிகா, நக்மாவை பற்றியும் கேள்விகள் கேட்க வாய்ப்பு உள்ளது. அதனால், தமிழ்நாடு தேர்வாணைய அமைப்பில் நடுநிலையாளர்களை நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு

மேலும், “வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சியின் கோரிக்கையான மதமாற்றத் தடை சட்டம், பசு வதை சட்டத்தை யார் தேர்தல் அறிக்கையாக வெளியிடுகிறார்களோ அவர்களுக்கு இந்து முன்னணியின் ஆதரவு” என்றார்.

இதையும் படிங்க:பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை 100 சதவீதம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details