ராமநாதபுரத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் தினமும் 200 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 1328 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 800க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனை பெற பிரத்யேக எண்! - மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மக்கள் கரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இலவச எண்ணை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார்.
கரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனை பெற பிரத்தியேக எண்!
இந்நிலையில், 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மக்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான அச்சத்தை போக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இலவச உதவி எண் 04568-1077ஐ வெளியிட்டுள்ளார். இந்த எண்ணை தொடர்புகொண்டு பொதுமக்கள் தடுப்பூசி குறித்த சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு; 4,092 பேர் உயிரிழப்பு!