தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டும் விபத்துகள் குறைந்தபாடில்லை.
ராமநாதசுவாமி கோவில்: தலைக்கவசம், நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு - விழிப்புணர்வு
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோபுரத்தில் தலை கவசம், நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு காட்சிகள் எல்இடி பலகை மூலம் திரையிடப்பட்டது.
இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய புனித தலங்களில் ஒன்றாகும். இதில் முக்கிய விழாவான ஆடித் திருவிழா 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் நான்கு கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதைக் கருத்தில் கொண்டு மேற்கு கோபுரத்தில் எல்இடி பலகை மூலம் தலைக்கவசத்தின் அவசியம், நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது. இந்த புதுவித முயற்சி பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவருகிறது.