தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் சீற்றம் எதிரொலி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை! - ban fishing today, Rameswaram Fisheries department

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் சூறைக்காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

fishery department-ban-fishing

By

Published : Sep 3, 2019, 1:23 PM IST

ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்றும் தொடர்ந்த சூறைக் காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வரை வீசுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மண்டபம் பகுதியிலிருந்து கடலுக்குச் செல்லவிருந்த மீனவர்களுக்கு மீன்வளத்துறை அனுமதி சீட்டு வழங்காமல் கடலுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

மேலும், தடையை மீறி மீன்பிடிக்கச் சென்றால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் 70க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்படுள்ளன.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details