வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே நேற்று இரவு ராமநாதபுரம் முழுவதும் கனமழை கொட்டித்தீரத்தது.
இதனால் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து பணிமனையின் சுற்றுச் சுவர் 130 மீட்டர் தூரத்திற்கு இடிந்தது. இதில் பேருந்துகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பாம்பன் அருகே சின்னப் பாலம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் வெளுத்துவாங்கிய கனமழை இதனிடையே, சின்னப் பாலத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ராமநாதபுரத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் பாம்பனில் 183 மி.மீ., மண்டபத்தில் 176.90 மி.மீ., தங்கச்சிமடத்தில் 168.30 மி.மீ., ராமநாதபுரத்தில் 39 மி.மீ., என மாவட்டம் முழுவதும் சராசரி மழை அளவு 68.85 மி.மீ. ஆக பதிவாகி இருக்கிறது. ராமநாதபுரத்தில் உள்ள தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 15 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சின்னப் பாலத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து விதத்திலும் தாயார் நிலையிலும் உள்ளது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க...
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! முன்னேற்பாடுகள் தீவிரம்!