தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாகன சோதனை! விதிமீறலுக்கு அபராதம் விதிப்பு - சுகாதாரத்துறை சார்பில் வாகன சோதனை

ராமநாதபுரம்: வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்குள் முகக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Health dept. vehicle check and warns travelers for not following safety guidelines
கரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர்

By

Published : Sep 21, 2020, 6:47 PM IST

நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு கட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இதையடுத்து பொதுமுடக்கத்தில் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் கோயிலில் தரிசானம் மேற்கொள்வதற்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தெரிடங்கியுள்ளது.

ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள், இதர வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா, பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்று சுகாதாரத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. சுகாதாரத்துறை ஆய்வாளர் பாலா சுப்புரமணியம் தலைமையில் பாம்பன், தங்கச்சி மடம் பகுதியில் ஆய்வாளர்கள் இந்தச் சோதனைமேற்கொண்டனர்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம்

அப்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவர்களிடமும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அவர்களை எச்சரிக்கை செய்தும் அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க: அங்கொட லொக்காவுடன் தொடர்பா? - சிங்கள காவலர் பிரவின் குமாரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details