பாஜகவைச் சேர்ந்த கட்சி தொண்டரின் திருமண விழாவில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதுகுறித்து பலமுறை சொல்லியும் இச்சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பின்னர் பேசுகையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் வன்முறையாளர்கள் திட்டமிட்டு காவல் துறையினரையும் பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இந்தக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 54 பேர் காவல் துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.