ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ளது மகான் அல் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்கா.இங்கு 845ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழா நடைப்பெற்றது. இதில், நாட்டிய குதிரைகள் நடனத்துடன், அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலத்தில் சந்தனக்கூடு இன்று அதிகாலை தர்காவை வந்தடைந்தது.இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கலந்துகொண்டார்.
ஏர்வாடி தர்காவில் 845ஆவது ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலம் - 845ஆவது சந்தனக்கூடு விழா
ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் நடைபெற்ற 845ஆவது சந்தனக்கூடு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கலைகட்டியது ஏர்வாடி விழா
இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.