தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் இன்று (டிச. 18) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Govt. employees protest
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 18, 2020, 8:31 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதிய ஓய்வு ஊதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வு ஊதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தலின் பொழுது வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், மத்திய பாஜக அரசு புதிய ஓய்வு ஊதியத் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதிமுக அரசு இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது. தற்போது புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிஎஸ் ஓய்வு ஊதிய ஒழிப்பு திட்ட இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று, புதிய ஓய்வு ஊதிய முறையை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: வன்கொடுமையில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details