தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி!

ராமநாதபுரம்: விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசு விரைவுப் பேருந்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜப்திசெய்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

bus
bus

By

Published : Mar 31, 2021, 7:33 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள சாத்தக்கோன்வலசை பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி அரியமான் கடற்கரை பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவரது மனைவி மல்லிகா 2019 மார்ச் மாதம் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு 18 லட்சத்து 590 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்த நிலையில், மல்லிகா நீதிமன்றத்தில் நிறைவேற்றல் மனுவைத் தாக்கல்செய்தார். அதனை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் வட்டியுடன் சேர்த்து 20 லட்சத்து 70 ஆயிரத்து 283 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர் அரியவன் ராமநாதபுரம் அரசுப் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை புறப்பட இருந்த அந்தப் பேருந்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறைப்பிடித்தார். பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்ட பேருந்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details