ராமநாதபுரம்:திருவாடானை தாலுகா தொண்டி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நம்புதாளை பகுதியைச் சேர்ந்த கருமலை, நதியா, ராமலிங்கம், 10 வயது சிறுவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா வேனில் சித்தார்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்றனர்.
உப்பூர் கோயில் முன்னர், அந்த வேன் முன்னே சென்ற பேருந்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மற்றவர்கள் எவ்வித ரத்தக் காயமும் இன்றி உயிர்தப்பினர். அங்கிருந்த பொதுமக்கள் உடனே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவசர உதவிக்கு அழைத்துள்ளனர்.