ராமநாதபுரம்: ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று(ஜூன்.24) தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வரவேற்பளித்தனர்.
ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் - தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று (ஜூன் 25) அதிகாலை தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்ட ஆளுநர் குடும்பத்துடன், ராமநாதசுவாமி கோயில் சென்று தரிசனம் செய்தார். இதனிடையே அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினார். இவரது வருகையை ஒட்டி கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆளுநர் தனுஷ்கோடி, அப்துல் கலாம் இல்லம், நினைவிடத்திற்கு குடும்பத்துடன் செல்ல உள்ளார்.
இதையும் படிங்க:கே.கே.நகரில் மரம் சரிந்தது: மழைநீர் வடிகால் பணி காரணமாக விபத்து ? - மேயர் பிரியா விளக்கம்