ராமநாதபுரம்:அரசு சேதுபதி நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவர்கள் பயிலும் இந்த அரசுக் கல்லூரியில், மாணவ மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மழைக்காலங்களில் கல்லூரி வளாகத்தில் மழைநீர் புகுந்து கழிவு நீருடன் கலந்து நோய்த்தொற்று பரவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாணவி கூறுகையில், அதிக தொலைவில் இருக்கும் மண்டபம், சாயல்குடி போன்ற பகுதிகளிலிருந்து சரியான நேரத்தில் கல்லூரிக்கு வர இயலவில்லை. இதிலும் காலை 9 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்குள் வரவில்லை என்றால் அடையாள அட்டைகளை பறித்து வைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு மேல் தராமல் அலைக்கழிக்கிறார்கள். கல்லூரி அடையாள அட்டை இல்லாமல் பேருந்தில் பணம் கொடுத்து செல்ல வேண்டியிருக்கிறது.