தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமக்குடி, வீட்டின் கதவை உடைத்து கைவரிசை - வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

இராமநாதபுரம்: பரமக்குடி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

Gold theft
Gold theft at ramanathapuram

By

Published : Feb 8, 2020, 12:42 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள விளத்தூர் பெரியகுடியிருப்பைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 56).

இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், கங்காதேவி, இந்துமதி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் மலைச்சாமி காலை 9.30 மணிக்கு தனது குடும்பத்துடன் பரமக்குடியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

பின்பு அவரது இரு மகள்களும் பிற்பகல் 1 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையினுள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 92 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

இதுபற்றி பரமக்குடியில் இருந்த தந்தை மலைச்சாமிக்கு மகள்கள் இருவரும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் எமனேசுவரம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details