ராமநாதபுரம்: வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114ஆவது ஜெயந்தி, 59ஆவது குருபூஜை விழா கமுதி அருகேயுள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்படவுள்ளது.
முன்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 13.7 கிலோ எடை கொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். மதுரை தனியார் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக்கவசத்தை, ஆண்டுதோறும் அக்டோபர் 25ஆம் தேதி ஜெயந்தி விழாவுக்காக ஒப்படைப்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கமாகக் கொண்டிருந்தார்.