தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி! - ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம்: திருவாடானை வாரச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு 3 மணி நேரத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

thiruvadanai Weekly Market

By

Published : Oct 27, 2019, 10:03 PM IST

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் ஆட்டுக்கறி இல்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது இல்லை. அதன் காரணமாக தீபாவளிக்கு சில தினங்கள் முன்பு சந்தைகளில் ஆடு விற்பனை களைக் கட்டத் தொடங்கும். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வழக்கமாக திங்கட்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும், ஆனால் தீபாவளியை முன்னிட்டு இன்று சிறப்பு வாரச்சந்தை நடைபெற்றது.

வாரச் சந்தையில் காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் அதிகாலை 4 மணி முதலே ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதையடுத்து, காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை, மூன்று மணி நேரத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

இதனிடையே, திருவாடானை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆடுகளை வாங்கிச் சென்றனர். மேலும், வாரச் சந்தை தொடங்கி சில மணி நேரங்களிலேயே ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதனால் வியாபாரிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மாட்டுச் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவு: ரூ.3 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details