ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை அடுத்துள்ள பாம்பன் சின்னப் பாலம் கடற்கரையில் ஒருவித வாசனையோடு மூட்டை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக குற்றப்பிரிவு தடுப்பு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடற்கரையில் கிடந்த கஞ்சா மூ்ட்டை: போலீசார் விசாரணை - Ganja sac near Pamban seashore seized
ராமநாதபுரம்: பாம்பன் சின்னப் பாலம் கடற்கரையில் கிடந்த 20 கிலோ கஞ்சா மூட்டையை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
![கடற்கரையில் கிடந்த கஞ்சா மூ்ட்டை: போலீசார் விசாரணை Ganja sac near Pamban seashore seized](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:01:20:1625409080-tn-rmd-02-ganja-seize-bag-seize-at-seashore-visual-script-tn10040-04072021114659-0407f-1625379419-131.jpg)
Ganja sac near Pamban seashore seized
இத்தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற குற்றவியல் தடுப்பு காவல் துறையினர், பாம்பன் தனிப்பிரிவு காவலர் பிரபுதுரை மூட்டையை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கஞ்சா மூட்டையை பாம்பன் காவல் நிலையம் கொண்டு வந்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் கடந்த மாதம் தீவு பகுதியில் கரை ஒதுங்கி கரையோர் காவல் படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா பார்சல்களின் ஒரு பகுதிதான் அந்த கஞ்சா மூட்டை என தெரியவந்துள்ளது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.