ஒவ்வொரு நிதியாண்டிலும் கோவில்களின் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன்படி, அரசின் மானிய நிதியுதவிகள் நேரடியாக திருக்கோவில்களுக்கு கிடைக்கும் வகையில், கோவில்களின் பெயரில் தனியாக வங்கிக்கணக்கு தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை, அரியலூர், தருமபுரி, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய 12 கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்ள, ரூ.6 கோடி நிதியை இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு ரூ.34,70,000 நிதி ஒதுக்கீடு! - தமிழக அரசு
ராமநாதபுரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலய திருப்பணிக்காக 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 2020-21 ஆம் ஆண்டில் 12 திருக்கோவில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக இந்த ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலய திருப்பணிக்காக ரூ.34.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோவில்களுக்கும் படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பகல்பத்து 2ஆம் நாள்: முத்து சாய் கொண்டையுடன் எழுந்தருளிய ஸ்ரீரங்க நம்பெருமாள்