ராமநாதபுரம்: வெண்ணத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் செயலராக சங்கர் ராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக சங்கர் ராமன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் கூட்டுறவு சங்க பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தார். அப்போது சங்கர் ராமன் ரூ.15.98 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.