ராமநாதபுரம்: ராமநாதபுரம் அடுத்த காட்டூரணி எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் இன்பராஜ், அவருடைய கூட்டாளிகள் யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சி பல நாள்களாகப் பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது இன்பராஜ், சங்கர், கார்த்திக், விஜய் ஆகியோர் குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். இதையடுத்து கேணிக்கரை காவல் துறையினர் நான்கு பேரையும் கைது செய்து, சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.