ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த முருகலிங்கம், வில்வதுரை, காளிமுத்து ஆகியோர் நிலத்தகராறில் கடந்த மார்ச் மாதம் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இதையடுத்து கடலாடி காவல் துறையினர் மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடக்கக்கூடும் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூன்று நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து முருகலிங்கம், வில்வதுரை, காளிமுத்து ஆகியோரை கடலாடி காவல் துறையினர் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் அபிராமம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.