ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடையாளம் தெரியாத சிலரால் இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு மாடுகளை கிளியூர் கிராம சாலை வழியே ஒரு கும்பல் இன்று (ஜன.13) கடத்திச் செல்வதாக நயினார்கோவில் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நயினார்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அந்த வாகனத்தில் இரண்டு காட்டு மாடுகள் இருந்ததையடுத்து, கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.