தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை: பால்குடம் எடுத்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் - முத்துராமலிங்கத் தேவருக்கு பால்குடம் எடுத்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பால் குடம் எடுத்தார்.

பால்குடம் எடுத்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பால்குடம் எடுத்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

By

Published : Oct 28, 2020, 4:55 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் வரும் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் 113ஆவது பிறந்தநாள் விழாவுடன், 58ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அன்றைய தினம் தேவருக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

ஆனால், கரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று (அக்.,28) மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் பால்குடம் எடுத்தவாறு சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

பால்குடம் எடுத்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து, தேவரின் தங்கச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்தவர் தேவர். தேசியத்தையும், தெய்வீகத்தையும் அவர் தனது இரண்டு கண்களாகக் கொண்டவர் என்றார்.

இதையும் படிங்க:தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய கருணாஸ் எம்எல்ஏ

ABOUT THE AUTHOR

...view details