ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தவசிமுனி (52). இவர் முன்னாள் இந்து முன்னணி நிர்வாக மற்றும் அகில இந்திய மீனவ பேரவை நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் சேகர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், இன்று (நவம்பர். 10) சேகர் தவசி முனியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.