ராமநாதபுரம் மாவட்டத்தில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து, ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழக்கடை, பஜார் பகுதிகளில் உள்ள குடோன்கள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இயற்கைக்கு மாறாக கார்பைடு கல் மற்றும் ரசாயணம் தடவி பழுக்க வைக்கப்பட்ட சுமார் 1500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்! - 1500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
ராமநாதபுரம்: கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்
மேலும், உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் தொடரும் என உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.