ராமநாதபுரம்:கரோனா தொற்றின் இரண்டாம் அலை ராமநாதபுரத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் நாளொன்றுக்கு 300க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று (மே.16) மட்டும் 399 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனை, தனிமைப்படுத்துதல் மையம், வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு, 2,047 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கீழக்கரை, மண்டபம், ராமநாதபுரம் நகர் பகுதியில் நோய்களின் தாக்கம் வேகமாகப் பரவுகிறது. இதனால் அதிக அளவு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரை உயிரிழக்கும் சோகமும் நிகழ்கிறது.