தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 மீட்சி: ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் வீடு திரும்பினர் - ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் வீடு திரும்பினர்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் கரோனா நோய்க் கிருமி தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், 8 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ramanathapuram corona report
ramanathapuram corona report

By

Published : Apr 28, 2020, 8:51 AM IST

Updated : Apr 28, 2020, 12:25 PM IST

ராமநாதபுரம்: கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ராமநாதபுரத்தில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருந்து வருகிறது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக பரமக்குடி பகுதியில் 9 பேர் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள சூழலில், நேற்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதில் பரமக்குடியைச் சேர்ந்த 3 பேரும், கீழக்கரையைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர். தற்போது வரை ராமநாதபுரத்தைச் சேர்ந்த 7 பேர் வீடு திரும்பிய நிலையில், 8 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Last Updated : Apr 28, 2020, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details