ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள நிலா கிளினிக்கில் சிகிச்சைப் பெற்ற அழகம்மாள் என்பவர் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமடைந்த மகன் முருகேசன் தொண்டி காவல் நிலையத்தில் அங்கு மருத்துவம் பார்த்த ராஜலட்சுமி என்பவர் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தலைமறைவான ராஜலட்சுமியை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் போலி சான்றிதழ் வைத்து கிளினிக் நடத்திவந்ததும் மங்களகுடி பகுதியிலுள்ள மாறன் கிளினிக் இவருடையது என்பதும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தும் இவர் தற்போது வேறு ஒரு நபருடன் வசித்துவரும் செய்தியும் அம்பலமாகியது.
தொண்டியில் போலி மருத்துவர் உள்பட 5 பேர் கைது தொடர்ந்து கிளினிக்கில் உள்ள மருந்துகள், மாத்திரைகளை கைப்பற்றிய காவல் துறையினர் அங்கிருந்த மருத்துவச் சான்றிதழை ஆய்வுசெய்தபோது, ஏற்கனவே 1987ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவக்கல்வி முடித்து தற்போது ஹைதராபாத்தில் மருத்துவராக இருப்பவருடையது என்பதும் தெரியவந்தது.
போலி மருத்துவர் ராஜலட்சுமி மேலும், இது தொடர்பாக போலி மருத்துவர் ராஜலட்சுமி, அவரது நண்பர் சுரேந்தர், கிளினிக் வைப்பதற்கு உறுதுணையாக இருந்த கிங் பீட்டர், செல்வம், வழக்குரைஞர் கலந்தர் ஆசிக் அகமது ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக மூத்தத் தலைவரும், பொதுச்செயலாளருமான அன்பழகன் காலமானார்